குளித்தாலே சிறுமி இறந்துவிடுவார்..! அரிய நோயால் அவதி..!
தண்ணீரில் கண்டம் என்று பலபேர் காமெடியாக சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். அது தற்போது உண்மையாகியுள்ளது. சிலபேர் குளிருக்கு பயந்து குளிப்பதை தவிர்ப்பார்கள். சிலர் குளிர் என்றும் பாராமல் குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பர். ஆனால் குளித்தாலே இறந்துவிடக் கூடிய ஒரு 12 வயது சிறுமி பற்றி பார்க்க போகிறோம்.
மனிதர்கள் தண்ணீர் இல்லாமல் இறப்பார்கள் என்று கேள்வி பட்டிருப்போம். ஆனால் தண்ணீரால் இழப்பார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் இந்த சிறுமிக்கு அக்வாஜெனிக் அர்டிகேரியா என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.
இவர்களுக்கு தண்ணீரால் பல பிரச்சினைகள் உடல் ரீதியாக நிகழ்ந்துள்ளது. இவர் கொஞ்ச நேரம் இதில் போனாலே போதும் உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். உடல் வியர்ப்பது மட்டுமில்லாமல் பல உடல் அரிப்பு போன்ற தோல் பிரச்சினைகளும் சிறுமிக்கு ஏற்பட்டுவிடும்.
இதனால் இங்கு சிறுமி கோடை காலத்திலும் சரி மழை காலத்திலும் சரி வீட்டிற்குள்ளே தான் இருப்பார். இந்த சிறுமிக்கு தண்ணீர் குடிப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தண்ணீரில் குளிப்பதால் பிரச்சனை உள்ளது. இதுகுறித்து கூறிய மருத்துவர்கள் உடம்பு வியர்த்தால் பல வலிகளை சந்திக்க நேரிடும் இந்த சிறுமி குளித்தால் இறக்க நேரிடும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உலக அளவில் நூற்றுக்கும் குறைவான பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.






