--- --:--:-- --

ரயில் என்ஜின் மீது ஏறி செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற மாணவன் பலி..!

2

யில் என்ஜின் மீது ஏறி செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தந்தையுடன் சென்று ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் ரயிலின் முன் நின்று செல்பி எடுக்க முயன்றான். அப்போது ரயிலில் எஞ்சின் மீது ஏறி சிறுவன் படம் எடுத்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தாக்கியது.

 

இதனால் படுகாயம் அடைந்த சிறுவனுக்கு ரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தான்.

 

செல்பி மோகத்தால் சிறுவன் ரயில் நிலையத்தில் உயிரிழந்தது நெல்லையில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon