--- --:--:-- --

சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !!!

6.1

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.அப்போது, அவர் கூறுகையில் நீட் தேர்வு கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நீட் தேர்வை நடத்த வேண்டியதாகி விட்டது. இருப்பினும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அதிமுக அரசால் வழங்கப்பட்டது.

 

இதனால் இன்று 313 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அதிமுக அரசால் வழங்கப்பட்டது எனவும், இதனால் இன்று 313 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இருக்கிறார்கள்.சென்ற ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 6 பேர் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர் எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விசாரணைக்கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. விசாரணைக்கமிஷன் முடிந்த பின்புதான் எதையும் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும்,பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும்,இந்த ஆண்டு பத்தாவது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு அதைப் பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றார்.

 

மேலும்,நிருபர் ஒருவர் நீட் தேர்வை பற்றிய கேள்வி கேட்கும் பொழுது தவறான வார்த்தையில் உபயோகித்ததால் கோபப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர் ஆகிய நீங்கள் சரியான கேள்வி கேட்க வேண்டும்.முறையான தகவல்களுடன் கேள்வியை கேட்க வேண்டும் என காட்டமாக கூறிவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

 

செய்தியாளர் சந்திப்பின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon