--- --:--:-- --

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்..!

2.1

டிகர் விஜய்யின் தந்தை தொடங்கிய கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் என்கிற ராஜா ராஜினாமா செய்துள்ளார்.

 

திரைப்படங்களிலும் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் அரசியல் பேசி வந்த நிலையில் திடீர் திருப்பமாக சில நாட்களுக்கு முன்பு அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்தார்.

 

எனினும் கட்சிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என அறிவித்த நடிகர் விஜய், தந்தை தொடங்கிய கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்நிலையில் சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பத்மநாபன் என்ற ராஜா தெரிவித்துள்ளார். அவர் சந்திரசேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் உறுப்பினராக இணைய போவதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon