தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புற பகுதியில் காற்று மாசுபடுவதாகவும் இதனால் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் போராட்டத்தின்போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஆலை மூடி முத்திரையிடப்பட்டது. ஆலையை திறக்ககோரி கோரி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு அளித்துள்ள பதில் மனுவில் இடைக்காலமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு மீதான விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.







