--- --:--:-- --

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை..!

9.1

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவிலும் பரவலாக மழை பொழிந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது.

 

மாலை மற்றும் இரவு நேரத்திலும் விட்டுவிட்டு பரவலாக மழை பொழிந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் மாலையில் கனமழை பெய்துள்ளது.

 

ஆலத்தம்பாடி, வேலூர், பட்டிமேடு, முத்துப்பேட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon