--- --:--:-- --

அதிக மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு..!

7

Nikon D1X 2/16/2002 2:02:14.6 PM Color Data Format: RAW (12-bit) Compression: None Image Size: Large (3008 x 1960) Lens: 135mm f/2 Focal Length: 135mm Exposure Mode: Aperture Priority Metering Mode: Center-Weighted 1/1000 sec - f/5.6 Exposure Comp.: 0 EV Exposure Difference: 0 EV Flash Sync Mode: Not Attached Sensitivity: ISO 125 Color Mode: Mode II (Adobe RGB) Hue Adjustment: 3 White Balance: Cloudy Tone Comp: Less Contrast Sharpening: Low

தீபாவளி பண்டிகையின் போது அதிக மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வெடிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்க முயற்சிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை அரசு அனுமதித்து இருந்த நேரத்தில் உரிய இடத்தில் கூட்டாக வெடிக்கும் மாசற்ற தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon