பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் வரும் திங்களன்று பதவியேற்பார்..!
பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் வரும் திங்கள்கிழமை பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நிதிஷ்குமார் வரும் வாரம் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்பார் என்று அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார். எனினும் நிதிஷ் குமார் திங்கள்கிழமையே பதவியேற்க கூடும் என அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
எனினும், பதவியேற்பு தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களைவிட ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களையே வென்று இருந்தாலும் நிதிஷ் குமாரே முதல்வராக தொடர்வார் என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் தலைவராக நிதிஷ் குமாரை இன்னும் தேர்வு செய்யவில்லை.







