--- --:--:-- --

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் இளைஞர் வெட்டி படுகொலை..!

4

ரூரில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

 

கணபதிபாளையம் மதன்ராஜ் என்பவருக்கும் தான்தோன்றிமலை மோகன்ராஜ் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. மகளிர் சுய உதவிக்குழு நடத்திவரும் தாயாரிடம் கடன் வாங்கிய பெண் ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்ட மோகன்ராஜிடம் வீடு தேடிச் சென்று மதன்ராஜ் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

 

இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதலில் அரிவாளால் வெட்டப்பட்ட மதன்ராஜ் நிகழ்வு இடத்தில் பலியானார். படு காயங்களுடன் மீட்கப்பட்ட மதன்ராஜ் நண்பர் பூபதி ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மோகன்ராஜை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon