--- --:--:-- --

டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

4

டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளிகளை திறக்க பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு கூறியது.

 

தேனி லோயர் கேம்ப் பகுதியை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருவதாகவும் பெரும்பாலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளை திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அதற்கு ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களும். ஆசிரியர்களும் கொரொனாவால் பாதிக்கப்பட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீதிபதிகள் உட்பட பலரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகளும், மாணவர்களும் பாதிக்கப்படலாம்.

 

எனவே டிசம்பருக்கு பின் பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு சிறந்த முடிவு எடுக்கும் என்பதால் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள் பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்கும் என கூறி வழக்கை நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon