--- --:--:-- --

தமது பிறந்த நாளை நற்பணி தினமாக அறிவித்து மக்களுக்கான நற்காரியங்களை செய்யுங்கள்..!

7.1

ட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான காரியங்களை இன்றே தொடங்குங்கள் என மக்கள் நீதி மையத்தினரை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

66-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி கமலஹாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கால்வைத்த துறைகளில் எல்லாம் உங்கள் உதவியுடன் வெற்றி கண்ட தாம் வாழ்வின் முக்கியமான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறேன் என கூறியுள்ளார்.

 

இப்போது இருக்கும் கொரொனா சூழல் கொண்டாட்டத்திற்கு உரியதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தமது பிறந்த நாளை நற்பணி தினமாக அறிவித்து மக்களுக்கான நற்காரியங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தை சீரமைக்க போவதன் முன்னோட்டமாக நமது காரியங்கள் தமது பிறந்த நாளில் இருந்தே துவங்கட்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon