ஈரோட்டில் தகாத உறவு வைத்திருந்த பெண் திடீர் தற்கொலை..!
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பெண் தற்கொலை செய்த நிகழ்வில் அவருடன் தகாத உறவு கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்தனர். முதியனூரை சேர்ந்த சிவனாவின் மனைவிக்கும் இதே பகுதியை சேர்ந்த தினேஷுக்கும் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தினேசுக்கும், குமாரிக்கும் பிரச்சினை இருப்பதாகவும் இதனால் குமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. தினேஷை கைது செய்ய வலியுறுத்தி குமாரியின் உடலை வீட்டின் முன் வைத்து அவரது உறவினர்கள் போராடியதையடுத்து தற்கொலைக்கு தூண்டியவனை போலீசார் கைது செய்துள்ளனர்.






