நவம்பர் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு..!
தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்களின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்யாமல் தமிழகத்தில் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இஸ்ரேல், தென்கொரியா, வியட்நாம் நாடுகளில் தொடங்கப்பட்ட தொடக்கப் பள்ளிகளைவிட மேல்நிலைப் பள்ளிகளில் அதிக கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்தாண்டு பொங்கல் விடுமுறைக்கு பிறகு அப்போதுள்ள சூழ்நிலைகளை ஆய்வு செய்து பள்ளிகளை திறக்கலாம் என மருத்துவர்கள் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறியிருக்கும் ஸ்டாலின் பெற்றோர், ஆசிரியர் சங்கம் மற்றும் மருத்துவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறக்கும் அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.






