--- --:--:-- --

மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

9

நாளையும், நாளை மறுநாளும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மட்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

 

இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon