நடப்பாண்டில் கடுமையான குளிர்காலம் நிலவும் என தகவல் வெளியாகியுள்ளது..!
நடப்பு ஆண்டில் நாட்டில் கடுமையான குளிர்காலம் நிலவும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கடந்த மாதம் டெல்லியில் இரவு நேர வெப்பநிலை சராசரியாக 17.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியதாக கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றால் வட மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட குறைவாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் லானினா தாக்கம் காரணமாக நடப்பாண்டில் குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.






