--- --:--:-- --

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்குகிறது..!

1

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்குகிறது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு பிரச்சினையில் பாஜக கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி தனித்து களம் காண்கிறது.

 

இதேபோல ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் முதல் கட்டமாக இன்று 6 மாவட்டங்களில் உள்ள 77 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

 

இதற்காக 36 ஆயிரத்து 380 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் 6 ஆயிரம் பதற்றமானவை என கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக காவல் துறை மட்டுமின்றி துணை ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

கொரொனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளர்களுக்கு கையுறை, சானிடைசர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டியிடும் ஆயிரத்து 66 வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை இரண்டு கோடி வாக்காளர்கள் இன்னும் சிறிது நேரத்தில் வாக்களிக்க உள்ளனர்.

 

இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி 94 தொகுதிகளிலும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி 78 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon