நேரலைக்கு தயாராகிக் கொண்டிருந்த நிருபரின் செல்போனை திருடிக்கொண்டு ஓடிய நபர்…!
அர்ஜென்டினாவில் தொலைக்காட்சி நிருபர் நேரலைக்கு தயாராகிக் கொண்டிருந்த போது அவரின் செல்போனை ஒருவர் பறித்து சென்ற காட்சி கேமராவில் பதிவாகியது.
சாரண்டி தெருவில் தங்கள் நிருபர் டிமார்கோவின் செல்போனை ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிய காட்சியை எல்நோ தொலைக்காட்சி நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் வீடியோ வைரல் ஆனது.
செல்போன் பறிப்பு நடந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த காட்சியை பார்த்து திருடனை அடையாளம் கண்டறிந்து அதன் மூலம் தனது செல்போன் திரும்ப கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.






