--- --:--:-- --

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளி முருகன் உயிரிழந்தான்..!

4

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முருகன் தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகன் கடந்த ஆறு மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கை கால்கள் செயலிழந்து ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

கடந்தாண்டு இதே மாதம் லலிதா ஜூவல்லரியில் துளையிட்டு மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon