நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது…!
கொரொனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடையும் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் முக கவசம் அணிதல், 6 அடி இடைவெளி விட்டு செல்லுதல், உள்ளிட்டவைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கொரொனா வைரஸ் குறைவாக உள்ள பகுதிகளில் மாநில அரசு, மத்திய அரசை எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது அவ்வாறு விதித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதே நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு மாநில அரசு பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






