மருத்துவ மாணவர் விடுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..!
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்நிலை மருத்துவ மாணவர் ஒருவர் விடுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த லோகேஷ் குமார் என்ற 24 வயது மாணவர் முதுநிலை மருத்துவத்தில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 13 ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை கொரொனா வார்டில் பணியை முடித்துவிட்டு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த தனியார் விடுதியில் ஏழு நாட்கள் தனிமைப்படித்திக் கொண்டிருந்தார். 7 நாள் நிறைவடைந்தது.
அவரை செல்போனுக்கு அழைத்தும் பதில் இல்லாததால் நண்பர்கள் விடுதி கதவை உடைத்து பார்த்தபோது அவர் உயிரிழந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரின் உடல் அங்கு கூறாய்வு செய்யப்படுகிறது.
கூறாய்வு செய்யப்பட்ட பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரொனா பணிச்சுமையால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் மரணத்திற்கு மன உளைச்சல் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.






