சாக்கடையை சரி செய்ய முயன்ற 2 பேரை விஷவாயு தாக்கியது..! தீவிர சிகிச்சை..!
சென்னை மணலிபுது நகரில் பாதாள சாக்கடையை சரி செய்ய முயன்ற 2 பேர் விஷவாயு தாக்கியது. அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணலி புது நகர் 1வது தெரு இறைச்சி கடை வைத்துள்ள வேல்முருகன் தனது கடை முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் அதை சரிசெய்ய கூலி தொழிலாளி தர்ம ராசை அழைத்து வந்துள்ளார்.
அவர் மூடியைத் திறந்து உள்ளே இறங்கிய போது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற இறங்கிய வேல்முருகனும் மயங்கி சரிந்தார். தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.






