--- --:--:-- --

ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்..!

7

காஷ்மீரை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் வரைபடத்தை வெளியிட்டதற்கு ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் அஜய் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டது நாட்டின் இறையாண்மை அவமதிக்கும் செயல் என தெரிவித்துள்ள அவர் இதற்கு அரசு கடும் அதிருப்தியை தெரிவிப்பதாகவும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் டுவிட்டரில் இச்செயல் அதன் நடுநிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளதாக கூறியுள்ளார். இந்தியர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon