--- --:--:-- --

“விர்ர்..ரென ரூ.100 ஐ தாண்டிய விலை!!மீண்டும் கண்ணீர் விட வைக்கும் “வெங்காயம்”!! அரசின் கிலோ ரூ.45 அறிவிப்பு சாத்தியமா?

dfg

வெங்காயம் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் கிடு கிடுவென ரூ.80,100, 120 என தினமும் ஒரு விலையாக உச்சத்துக்கு சென்று வருகிறது. பண்டிகை காலத்தில் இப்படி வெங்காயம் விலை எகிறி வருவதால் ஏழை , நடுத்தர குடும்பங்களை மீண்டும் கண்ணீர் விட வைத்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் கிலோ ரூ.45க்கு வெங்காயத்தை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

விர்ர்..ரென ரூ.100 ஐ தாண்டிய விலை

வறட்சி என்றாலும் சரி… அடைமழை என்றாலும் சரி… இந்த வெங்காயத்திற்கு கடும் கிராக்கி வந்து விலையும் விர்ரென ராக்கெட் வேகத்தில் உயர்வது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஜனவரி, பிப்ரவரியில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுமே கிலோ 200 ரூபாயைத் தாண்டி நாடு முழுவதும் அனைத்து தரப்பினரையும் கண்ணீர் விடச் செய்தது. அச்சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டாலும் அவை ருசிக்கவில்லை. பின்னர் உள்நாட்டு உற்பத்தி சீரான பின்பே விலைவாசி நார்மலானது.

 

கடந்த ஆறேழு மாதங்களாகவே பெரிய வெங்காயம் ரூ 20-30 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ 30-40 ஆகவும் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த ஓரிரு வாரங்களாக வெங்காயம் விலை மளமளவென உயரத் தொடங்கி விட்டது. இதற்கு காரணம் தமிழகத்துக்கு அதிக வெங்காயம் வரத்து உள்ள ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கன மழைதான் காரணம். அங்கு வெங்காயம் விளைச்சல் மழையால் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு வரத்து வெகுவாக குறைய விலை நாளுக்கு நாள் எகிறி, நேற்று பெரிய வெங்காயம் ரூ 100 ஐ தாண்டி 110 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ. 120 எனவும் உயர்ந்து விட்டது.

 

 

தசரா , தீபாவளி என பண்டிகை காலத்தில் இப்படி வெங்காயம் விலை உயர்வது ஏழை, நடுத்தர குடும்பங்களை கண்ணீர் விடச் செய்துள்ளது. இதில் தீபாவளி நெருக்கத்தில் இன்னும் விலை கூடும் என்பதால் சிலர் பதுக்கலில் ஈடுபட்டுள்ளதும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் தான் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு, கிலோ ரூ.45 விலையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. அரசின் பசுமை பண்ணை கடைகளில் ரூ 45 க்கு வெங்காயம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்களின் தினசரி உணவில் அத்தியாவசிய ஒன்றான வெங்காயத்தை ரூ 45 விலையில் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது சாத்தியப்படுமா? என்பது தான் கேள்வியாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon