கொடுமைப்படுத்திய ஆண் நண்பரை தீயிட்டு எரித்துக் கொன்ற பெண்..!
ஈரோடு அருகே தனி பட்டறைத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் அவனோடு தொடர்பில் இருந்த பெண்ணை எரித்துக் கொன்றது தெரிய வந்தது. ராசாம்பாளையத்தை சேர்ந்த சுதாகர் என்ற அந்த நபரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
சுதாகரின் மனைவி என கருதப்பட்டவர் விஷம் குடித்த நிலையில் மீட்கப்பட்டார். முதலில் இந்த சம்பவம் தற்கொலை என்பது விசாரணையில் தெரியவந்தது.
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பாண்டியன் பாளையத்தை சேர்ந்த லட்சுமி என்பதும் கணவனைப் பிரிந்த சுதாகரோடு வசித்து வந்தது தெரியவந்ததால் குடித்துவிட்டு அடித்து கொடுமை செய்து வந்த சுதாகர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த லட்சுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






