பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை.. சொல்லப் போகும் முக்கிய சேதி என்ன?
பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். அப்போது நாட்டு மக்களுடன் முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்ளப் போவதாக அவர் பதிவிட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பிரச்னை தொடங்கிய காலம் முதலே ஐந்தாறு முறை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தியுள்ளார். திடீரென ஒரு டூவீட் போட்டு இன்று மாலை 3ாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தப் போகிறேன்; முக்கிய சேதி சொல்லப் போகிறேன் என்று பிரதமர் மோடி சஸ்பென்ஸ் வைப்பதால் அது நாட்டு மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இப்படித்தான் முதல்முறை சுய ஊரடங்கு என அறிவித்து நாட்டு மக்களை தீபமேற்றுமாறும், மணி ஒலிக்கு மாறும் வேண்டுகோள் விடுத்தார். அடுத்த முறையோ, கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு ,பொது முடக்கம் என்ற அறிவிப்பை அறிவித்தார். அவருடைய சில உரைகளில் உப்பு, சப்பில்லாமல் இருந்ததும் உண்மை.
இந்நிலையில் பிரதமர் இன்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் அவர் சொல்லப் போகும் சேதி என்னவோ? என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர் சொல்லப் போகும், பகிர்ந்து கொள்ள உள்ள செய்தி, கொரோனா பற்றியதாகவே இருக்கும் என்றே தெரிகிறது.






