--- --:--:-- --

திரையில் மங்கிப் போன வாய்ப்பு : பாஜக மேடைகளில் காமெடி கலக்கலுக்கு வடிவேலு ஆயத்தமா? பரபரவென பரவும் தகவல்

14

தமிழக பாஜகவில் திரையுலகில் வாய்ப்புகள் மங்கிப் போன முன்னாள் பிரபலங்கள் வரிசையாக இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை குஷ்பூவைத் தொடர்ந்து வைகைப் புயல் வடிவேலுவும் பாஜக மேடைகளில் காமெடி கலக்கலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் பரப3க்கின்றன.

 

தமிழகத்தில் ஆறேழு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளுக்கும் இப்போதே தேர்தல் ஜுரம் வந்து விட்டது. பிரதான திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கட்சியை பலப்படுத்துவது, தேர்தலுக்கான குழுக்களை அமைப்பது, பிச்சார யுக்திகளை வகுப்பது என மும்முரத்தில் உள்ளன.

 

மேலும் இரு கட்சிகளுமே கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்த்தால் பலன் கிட்டும் என்ற கூட்டல் கழித்தல் கணக்குகளிலும் மோoரமாக உள்ளன. இதனால் கடந்த மக்களவைத் தேர்தலில் இடம் பெற்ற கட்சிகள் அந்தந்த கூட்டணியில் நீடிக்குமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளன.

 

ஆளும் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை பிரதான கட்சிகளாக இடம் பெற்றிருந்தாலும் அக்கூட்டணி படுதோல்வி கண்டது. இதனால் இந்தக் கட்சிகள் இம்முறை இடம் பெறுமா? தாமாக கூட்டணியில் இருந்து கழன்று கொள்ளுமா? அல்லது அதிமுகவாக இக் கட்சிகளை கழட்டி விடுமா? என்ற விவாதங்களும் தூள் பறக்கின்றன.

 

இதற்கெல்லாம் காரணம் இம்முறை தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என பாஜக காட்டும் தீவிர முனைப்புதான். அடுத்த சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும் என தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

 

இதனால் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து அதிக தொகுதிகளில் போட்டியிட பாஜக திட்டம் போடுவதாகவும் பேச்சு நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் பாஜக பலம் மிக்க கட்சியாக இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தினமும் அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் மேற்கொண்டு வருவது தான் ஹாட் டாபிக்காக அடிபடுகிறது.

 

இப்படி தினந்தோறும் பாஜக செய்திகள் பரபரப்பாக இருக்க, மாற்றுக் கட்சியினர், திரையுலகினர் என பல பிரபலங்களை கட்சியில் இணையச் செய்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

இதில் திரைத்துறையில் செல்வாக்காக இருந்து இப்போது வாய்ப்புகள் மங்கிப் போன பிரபலங்கள் பலரும் பாஜக பக்கம் சாய்ந்து வருவதும், அவர்களுக்கு அக்கட்சியில் உடனே ஏதாவது பதவி வழங்கப்படுவதும் என தினந்தோறும் பரபரப்பு கிளம்பி பட்டையைக் கிளப்பி வருகிறது பாஜக . இதுவரை இந்தப் பட்டியலில் கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்ல கடந்த வாரம் குஷ்பு பாஜகவில் சேர்ந்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில் தான் காமெடி புயல், வைகை புயல் என காமெடியில் தமிழ் திரையுலகில் பல காலம் கொடி கட்டிப் பறந்த வடிவேலுவும் பாஜகவில் இணையப் போவதாக இப்போது செய்திகள் கசிந்து வருகின்றன. ஏறத்தாழ 10 ஆண்டுகளாக புதிய பL வாய்ப்புகள் இன்றி வடிவேலு வீட்டில் முடங்கிக் கிடந்தாலும், இன்றளவும் அவருடைய பழைய காமெடிகள் தான் தமிழக மக்கள் அனைவர் மனதிலும் டாப் இடத்தில் உள்ளது. அதே போல் கிண்டல், கேலி, ஒப்பீடு என எந்த மீம்ஸ்கள் போடுவதானாலும் அதற்கும் வடிவேலு காமெடிகள் தான் இன்றும் உதாரணத்திற்கு எடுத்து வைக்கப்படுகிறது.

 

காமெடியில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்தவர் வடிவேலு, கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வேன் பிரச்சாரத்தில் குதித்தது தான், அவருடைய திரையுலக வாய்ப்புகள் மங்கிப் போக ஒரு காரணமாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

 

2011 தேர்தலில் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டுச் சேர்ந்தது திமுகவுக்கு ஒரு அதிர்ச்சி தான். இதனால் விஜயகாந்த் உடனான வடிவேலுவின் தனிப்பட்ட பகையை நன்கறிந்த திமுக அவரை பயன்படுத்தியது. வடிவேலுவின் பிரச்சார கால்ஷீட் ரூ.பல கோடிக்கு புக் செய்த திமுக ஊரெல்லாம் வேனில் சுற்றுப்பயணம் செய்ய வைத்தாலும் ஜெயித்தது என்னவோ, அதிமுக கூட்டணி தான்.

 

இதனால் அந்தத் தேர்தலுக்குப் பின் வடிவேலுவை படங்களில் புக் செய்ய பலரும் தவிர்க்க, கடந்த 10 ஆண்டுகளாக ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்டார். இடையில் சில படங்கள் வந்தாலும் வடிவேலு தேறவில்லை. இந்நிலையில் தான் முன்னாள் திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வீசி வரும் வலையில், வடிவேலுவும் சிக்கி விட்டதாகவும், விரைவில் பாஜகவின் ஐக்கியமாகப் போகிறார் என்ற தகவலும் உலா வருகிறது. அப்படி நடந்தால் பாஜக மேடைகளில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon