--- --:--:-- --

இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை கைது செய்த பாதுகாப்பு படை..!

12

இந்திய பகுதிக்குள் எல்லை தாண்டி நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பிரச்சினை நிலவி வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட இரு இராணுவத்திற்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் லடாக் பகுதியில் எல்லை தாண்டி நுழைந்த சீன வீரரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர். காரணம் குறித்து அவருடன் இந்திய ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட இந்திய ராணுவத்திடம் சீன ராணுவம் கேட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon