உறவினர்களுக்குத் திதி கொடுக்க வந்த 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!
ராமநாதபுரத்தில் உறவினர்களுக்குத் திதி கொடுக்க வந்த 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். சாயல்குடி அருகே மாரியூரில் 50க்கும் மேற்பட்டோர் கடலில் திதி கொடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இந்த ராட்சத அலை மூவரை இழுத்து சென்றது.
இதில் ஒருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கடலில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களை கடலோர காவல் படையினர் மீட்டனர். அவர்கள் இருவரும் அருப்புக்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.






