--- --:--:-- --

அடிப்படை மாற்றங்களை உருவாக்கும் புதிய கல்விக்கொள்கை..!

8

ஒட்டுமொத்த கல்வி முறையிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை ஒரு வாய்ப்பாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொளி வாயிலாக பங்கேற்றுப் பேசிய அவர் கடந்த கால இந்தியா மற்றும் எதிர்கால இந்தியாவின் வளமான கல்வி அமைப்பிற்கான மையமாக மைசூர் பல்கலைக்கழகம் திகழ்கிறது என்று கூறினார்.

 

பாஜக ஆட்சியில் புதிதாக 16 ஐ‌ஐ‌டிக்களும், 7 ஐ‌ஐ‌எம் கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

 

புதிய உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்க கட்டுப்பாடின்றி அனுமதி வழங்கப்படுகிறது என கூறிய பிரதமர் மோடி ஒட்டுமொத்த கல்வி முறையிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை ஒரு வாய்ப்பாக உள்ளது என்று கூறினார்.

 

மைசூர் பல்கலைக்கழகம் 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி நிறுவப்பட்டது. இது நாட்டின் ஆறாவது மற்றும் கர்நாடக மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகம் ஆகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon