--- --:--:-- --

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி.யின் ரூ.8.6 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

ikg

ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி மத்திய அமலாக்கத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான திமுக மீதான பழைய வழக்குகளை மத்திய அரசு தூசி தட்டத் தொடங்கியுள்ளது. 2ஜி வழக்கில் திமுக எம்.பி.க்களான கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீது மீண்டும் விசாரணை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

இந்நிலையில் திமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கவுதம சிகாமணி மீது மத்திய அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, கடந்த 2017-ம் ஆண்டில் கவுதம் சிகாமணி, ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக சொத்து வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது.

 

ரூ.8.6 கோடி முடக்கம்

 

அதன்படி தற்போது அவரது ரூ.8.6 கோடியிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாகவும், அந்நிய செலவாணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அதனடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon