--- --:--:-- --

கொரோனா பாதிப்பு : அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

14

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளரும், டிடிவி தினகரனுக்கு நெருக்கமானவருமான வெற்றிவேலின் உடல்நிலை திடீரென மோசமாகி கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் வட சென்னை மாவட்டத்தில் முக்கிய நிர்வாகி இருந்தவர் வெற்றிவேல். எம்எல்ஏவாகவும் இருந்து வந்தார். டி.டி.வி. தினகரன் அமமுக கட்சியை தொடங்கிய போது அவருடன் சென்றதால் எம்எல்ஏ பதவி பறிபோனது. தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளராக வெற்றிவேல் இருந்து வருகிறார்.

 

கட்சிப் பணிகளில் தீவிர மிக ஈடுபட்டு வந்த வெற்றிவேல், கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் காரணமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி அவா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில், நேற்று மாலை அவருடைய திடீர் என மோசமானது. கடும் மூச்சுத் திணறல் காரணமாக வெற்றிவேலின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், நுரையீரலில் தொற்று அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வெண்டிலேட்டா் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், ஆனாலும் அவரது உடல் நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

வெற்றிவேலின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. வெற்றிவேல் உடல் நிலை கவலைக்கிடம் என்ற தகவலால் அமமுகவினர் கவலையடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon