புரட்டாசி கடைசி சனியன்று வெறிச்சோடிய காரமடை ரங்கநாதர் திருக்கோவில் !!!
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் விளங்கி வருகிறது.இக்கோவிலில் வருடந்தோறும் மாசி மகத்திருத்தேர் பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதனைப்போல புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.அவ்வாறு வரும் பக்தர்கள் தாசர்களுக்கு படையலிட்டு ஆண்டவனை தரிசிப்பதும் வழக்கம்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இம்மாதம் 3,10,17 ஆகிய தினங்களில் பக்தர்கள் தரிசினத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும்,மற்ற நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் புரட்டாசி கடைசி சனியான இன்று பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது.இதனால் பக்தர்கள் கோவில் வளாகத்தின் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.ஆசையோடு சுவாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடனேயே சென்றனர்.இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.







