பிரபல நடிகை சனாகான் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!
பிரபல நடிகையும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளரான சனாகான் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிலம்பாட்டம், தன்னம்பிக்கை உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள சனாகான் மனித குலத்திற்கு சேவை செய்வதற்காக தன்னைப் படைத்தவரின் கட்டளையை பின்பற்றுவதற்கும் திரைத்துறையில் இருந்து முடிவு செய்திருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
இனிமேல் சினிமா துறை தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





