--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5088 பேருக்கு தொற்று உறுதி.. உயிரிழப்பு 10 ஆயிரத்தை தாண்டியது!!

wsa

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 5088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்தை தாண்டி 10052 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரு மாதங்களாகவே குறைந்தபாடில்லாமல் தினசரி 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று 5088 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று 5718 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதனால் மொத்தமாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 ஆக உள்ளது.

 

உயிரிழப்பு
எண்ணிக்கை
10 ஆயிரத்தை தாண்டியது!


தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி 10,052 உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் 1295 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

 

அடுத்தபடியாக கோவையில் 448, செங்கல்பட்டு 363, சேலம் 362, திருவள்ளுரில் 296, தஞ்சையில் 289 என மாவட்டங்களில் இன்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon