--- --:--:-- --

கேரளாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்தை கடந்த கொரொனா பாதிப்பு..!

7.1

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முதன் முறையாக ஒரே நாளில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரொனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.

 

கேரளாவில் கொரொனா தொற்று எண்ணிக்கை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தினசரி 15 ஆயிரமாக உயரும் என அம்மாநில சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 6 நாட்களில் மட்டும் 50,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள அமைச்சர்கள் ஐந்து பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon