தமிழ் மொழி மீதான பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்..!
தமிழ் மொழி மீதான பண்பாட்டு படையெடுப்பை நடத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழுவில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னகத்தினர் புறக்கணிக்கப்பட்டது பலரின் கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தொல்லியல் பட்டயப் படிப்புக்கான அறிவிக்கையில் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார். தமிழ்மீது பண்பாட்டு படையெடுப்பை நடத்தும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஒழித்திட முனையும் பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்புவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரயில்வே முன்பாக மின்வாரிய பணிகள் ஊட்டி ஆயுத தொழிற்சாலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை விட வட மாநிலத்தவர்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து இருப்பதை சுட்டிக் காட்டியிருக்கும் ஸ்டாலின் இந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிப்பதற்கு துணைபோகும் அதிமுக ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.







