ஒரு தலை காதல் – பெண் தர மறுத்ததால் காதலியின் தாய் வெட்டி படுகொலை..!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே திருமணத்திற்கு பெண் தர மறுத்த ஒரு தலை காதலியின் தாயை வெட்டி படுகொலை செய்த லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். பெரிய மொடச்சூரில் தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து வரும் மேரியை வீட்டு வாசலில் மர்ம நபர் ஒருவர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.
அதனை தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் கணேசனும் காயமடைந்தார். 19 வயது கடைசி மகளை கடந்த 5 ஆண்டுகளாக ஒருதலை காதலியாக காதலித்து வந்த லாரி ஓட்டுநர் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.







