உலகின் மிகவும் அரிதான வைரம் ஏலம்..! விலை எவ்வளவு தெரியுமா?
உலகின் மிகவும் அரிதான 102 கேரட் எடை கொண்ட வெள்ளை வைரம் 15.7 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு 271 கேரட் எடையில் எடுக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்டு பின்னர் 102 கேரட் எடைக்கு கொண்டு வரப்பட்ட இந்த வைரம் ஹாங்காங்கிலிருந்து ஏலம் விடப்பட்டது.
100 கேரட் எடைக்கு மேல் உள்ள ஏழு வைரங்களில் இந்த வெள்ளை வைரமும் ஒன்று என ஏலம் நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.






