--- --:--:-- --

1200 ஆண்டுகளாக நீரில் மூழ்கி கொண்டிருந்த வெனிஸ் நகரம்..!

12

த்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ள தடுப்பு அமைத்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த நகரின் ஒவ்வொரு ஆண்டும் உயர் அலைகளால் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி விடுவது வழக்கம்.

 

இந்த ஆண்டு நவம்பரில் 187 சென்டி மீட்டர் மழை பதிவானதால் 90 விழுக்காடு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நிலையில் வெள்ள தடுப்பு சட்டத்தை செயல்படுத்த அந்நாட்டு அரசு ஆயிரத்து 984 முதல் முயற்சி செய்து வருகிறது.

 

ஆனால் 2013 ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஊழல் முறைகேடு தொடர்பாக தாமதம் ஆனது. தற்போது இந்த திட்டத்தில் 78 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக நீருக்குள் மூழ்கிய பகுதிகள் தற்போது மூழ்குவது தடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon