நீரில் செல்லும் சைக்கிளை கண்டுபிடித்துள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டையர்கள் அசாருதீன் மற்றும் நசுருதீன் தண்ணீரிலும் செல்லும் மிதவை சைக்கிளை வடிவமைத்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆன இவர்கள் காலி தண்ணீர் கேன்கள் பொருத்தப்பட்டு மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் தண்ணீரில் செல்லக்கூடிய மிதவை சைக்கிளை இயக்கி அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
180 கிலோ எடை வரை இந்த சைக்கிள் தாங்கும் என தெரிவிக்கும் இவர்கள் பேரிடர் காலங்களில் நீர் நிலைகளில் மூழ்கியவர்களை மிக்க இது பயன்படும் என தெரிவித்தனர்.






