--- --:--:-- --

அதிமுக செயற்குழு : ஓபிஎஸ் படம் போட்ட “மாஸ்க்” அணிந்து “மாஸ்” காட்டிய தொண்டர்கள்… தலைமைக் கழகம் முன் ஏக பரபரப்பு!!

11.2

திமுக செயற்குழு கூடியுள்ள நிலையில் தலைமைக் கழக அலுவலகம் ஓபிஎஸ் படம் போட்ட மாஸ்க் அணிந்து அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் மாஸ் காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி உச்ச கட்டத்தில் உள்ள பரபரப்பான சூழலில், அதிமுக செயற்குழு கூடியுள்ளது. இதில் இரு தரப்பினரும் தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி போட்டியில் இறங்கி உள்ளதாகவே தெரிகிறது. இதனால் செயற்குழு நடைபெறும் ராயப்பேட்டை தலைமைக் கழகம் முன்பும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

 

இந்நிலையில் திடீரென 100-க்கும் மேற்பட்ட ஓ பிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் படம் போட்ட மாஸ்க்குகளை அணிந்து திடீரென மாஸ் காட்டியதால் ஒரே பரபரப்பானது. அவர்கள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக கோஷங்களையும் எழுப்பினர்.

Leave a Reply

Right Menu Icon