சீர்காழியில் ஒரு வீட்டில் முட்டையிலிருந்து வெளிவந்த நாகப்பாம்பு..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீடு ஒன்றில் முட்டையிலிருந்து வெளிவந்த 12 நாகப்பாம்பு குட்டிகளை இளைஞர் ஒருவர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார். கலியமூர்த்தி என்பவரது வீட்டின் மாடிப் படிகளில் நாகப்பாம்பு ஒன்று 27 முட்டைகளை இட்டு இருந்தது.
காலை அவற்றிலிருந்து ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கிய 15 பாம்பு குட்டிகள் அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தன. புளிச்சங்காடு பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான தினேஷ் என்பவர் வந்து மீதமிருந்த 12 குட்டிகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.







