நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல், ஆபாசம் பேசுதல், உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
மாடல் அழகியும் நடிகையுமான மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களை அழகி போட்டிகளுக்கு தயார் செய்யும் பயிற்சி நிறுவனத்தை ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் நடத்தி வருகிறார் தன் மீது அவதூறு பரப்பியதாக நடிகை மீரா மிதுன் மீது எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஜோ மைக்கேல் புகார் அளித்திருந்தார்.
அதில் கொலை மிரட்டல் ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மீரா மிதுன் மீது நடிகைகள் சனம் ஷெட்டி , ஷாலு ஷம்மு ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.






