--- --:--:-- --

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆன்லைனில் நாளை தமிழக அரசு கருத்துக் கேட்பு…! பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு!!

Online a

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை சார்பில் நாளை ஆன்லைன் வழியாக கருத்துக் கேட்பு நடத்துகிறது. இதில் கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்த புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையின்படி பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.

 

மத்திய அரசின் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியை கட்டாயமாக திணிக்கும் முயற்சி என தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இரு மொழிக் கொள்கைதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

 

அதன்படி, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை நாளை கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆன்லைன் வழியில் நடத்தப்படும் இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், கல்வியாளர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் உயர்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon