காற்றுக் குழலில் சிக்கி கொண்ட ஜெல்லிமீன்..!
ஸ்பெயினின் நீச்சல் வீரர் ஒருவர் கடலுக்குள் விட்ட காற்று குழியில் சிக்கி ஜெல்லிமீன் சுற்றிச் சுழன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அங்குள்ள பெலாரி தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் இளைஞர் ஒருவர் கடலுக்குள் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது குழல் மூலம் நீருக்குள் காற்று குவளையை உருவாக்கினார். அங்கு நீந்தி கொண்டிருந்த ஜெல்லி மீன் ஒன்று குமிழியைக் கண்டதும் ஆர்வத்துடன் அருகில் செல்ல நீரின் சுழற்சியில் அந்த ஜெல்லி மீன் சிக்கிக் கொண்டது.
அடுத்த நொடியில் இழுக்கப்பட்ட ஜெல்லிமீன் காற்று குமிழிக்குள் வளையத்தில் சிக்கி அதே வேகத்துடன் சுற்றி சுழன்றது. இறுதியில் அந்த வளையம் உடைந்து போனதால் ஜெல்லிமீன் அங்கிருந்து தப்பி சென்றது.






