--- --:--:-- --

சீனாவின் டிக் டாக் செயலிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது..!

3.1

சீனாவின் டிக் டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாது. சீனாவின் பைடான்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக் டாக் உலகம் முழுவதும் பிரபலம்.

 

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேர வீடியோ மூலம் திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த செயலிக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பயனாளிகளை கொண்டிருக்கும் டிக் டாக், அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேரை தன் வசப்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் அமெரிக்கர்களின் தரவுகளை டிக் டாக் திருடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை 90 நாட்களுக்குள் விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான பைடான்சுக்கு அதிபர் டிரம்ப் கடந்த மாதம் உத்தரவிட்டார்.

 

அமெரிக்காவில் டிக்டாக்கின் சந்தை மதிப்பு பல மில்லியன் டாலர் என்பதால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கான போட்டியில் களமிறங்கினார். இந்த போட்டியில் முன்னணியில் இருந்தது மைக்ரோசாஃப்ட். ஆனால் மைக்ரோசாப்ட்டை கைவிட்டு விட்டு ஆரக்கள்ளிடம் ஒப்பந்தம் செய்தது.

 

பெரும்பான்மையான பங்குகள் பைடான்ஸ் வசம் இருக்கும் என்றும் அதன் தலைமையகம் மட்டும் அமெரிக்காவில் இருக்கும் என்ற ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் இயக்கவில்லை. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் சீனாவின் தீய நோக்கத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த இரு செயலிகளையும் அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வீசாட் செயலியை பயன் படுத்துவதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் டிக் டாக் சீரியல் நவம்பர் 12ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்றும் அமெரிக்க வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த தடையை ஏற்க முடியாது என கூறியுள்ள டிக் டாக் நிறுவனங்கள் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்துவோம் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon