பாலிவுட் பிரபலங்கள் போதையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது..!
இயக்குனர் கரண் ஜோகர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பரிமாறப்பட்ட வெளியான வீடியோ வைரலானதை அடுத்து அதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் கரன் ஜோகர், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டதாக ஒரு கட்சியைச் சேர்ந்த மஞ்சிந்தர் சிங் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இந்த வீடியோவை கைப்பற்றிய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அதில் பங்கேற்று நட்சத்திரங்களை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.






