--- --:--:-- --

நடிகர் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்..!

3

டிகர் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியரை பணியில் சேர்க்க மறுப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

கொரொனா காரணமாக நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் வினோத் குமார் என்பவர் நோட்டீஸ் ஒட்டி இருந்தார். உயரதிகாரிகளின் உத்தரவுப்படி பின்னர் அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது.

 

எனினும் நோட்டீஸ் ஒட்டிய காரணத்துக்காக ஒப்பந்த பணியாளர் வினோத்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாநகராட்சி மண்டல அலுவலரும், இணை ஆணையரும் தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியும் மீண்டும் பணியில் சேரவும் வருகைப்பதிவேடு கையெழுத்திடவும் சுகாதார ஆய்வாளர் அனுமதி மறுப்பதாக வினோத்குமார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், மண்டல அதிகாரி ரவிகுமார், சுகாதார ஆய்வாளர் முத்து ரத்தினவேல், சுகாதார அதிகாரி லகஷ்மன் ஆகியோர் வரும் 30ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon