--- --:--:-- --

பாஜகவில் இணைகிறாரா பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்..!

4

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் அவரது குடும்பத்தினரும் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அண்மையில் தனது மகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக கங்கனாவின் தாயாரும் முன்னால் சமஸ்கிருத ஆசிரியருமான ஆஷா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய ராம் தாகூருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

 

தாங்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் என்பதை அறிந்து தங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்ததாக அந்த வீடியோவில் ஆஷா கூறியிருந்தார். இந்நிலையில் கங்கனா குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாதபோதும் இமாச்சலபிரதேச பாஜகவினரும் கங்கணா குடும்பத்தினருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon