மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை – மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலை குலையை செய்கிறது..!
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலை குலையை செய்திருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.
ஜோதி ஸ்ரீதுர்காவின் தற்கொலை குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஸ்டாலின் எல்லாரும் என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனால் எனக்குத்தான் பயமாய் இருக்கிறது என்று மாணவி பேசிய ஆடியோ நீட் தேர்வின் கோரமுகத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா மரணம் வரை உணர முடிகிறது என்று குறிப்பிட்டிருக்கும் ஸ்டாலின் தற்கொலை என்பது தீர்வல்ல என்று மட்டும் சொல்வதாக கூறினார்.
நீட் என்பது ஒரு தேர்வு அல்ல என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.







